2009-12-10 15:38:49

திருப்பீடத்துக்கும் பிரேசில் குடியரசுக்கும் இடையேயான 2008ம் ஆண்டு ஒப்பந்தத்ததைச் செயல்படுத்துவது குறித்த உடன்பாடு


டிச.10,2009 திருப்பீடத்துக்கும் பிரேசில் குடியரசுக்கும் இடையே 2008ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்ததைச் செயல்படுத்துவது குறித்த உடன்பாடு இவ்வியாழனன்று வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் இடம் பெற்றது.

திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் டொமினிக் மம்பெர்த்தி மற்றும் பிரேசில் குடியரசு தூதுவரின் பிரதிநிதி பியெனி பொத்தேரி தலைமையிலான குழுக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றன.

பிரேசிலில் கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டரீதியான நிலைமை, திருச்சபை கல்வி சார்ந்த பட்டயங்களை அங்கீகரித்தல், அரசுப் பள்ளிகளில் மறைக்கல்வி, கோவில் திருமணங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் இந்த உடன்பாட்டில் உள்ளன.
All the contents on this site are copyrighted ©.