2009-12-09 17:04:45

இந்த பத்தாண்டு காலமே மிகக்கூடுதலான வெப்பம் மிகுந்த காலம்


டிச.09,2009 உலகில் வெப்பநிலை குறித்த பதிவுகள் ஆரம்பித்த கடந்த 160 வருட காலத்தில் இந்த பத்தாண்டு காலமே மிகக்கூடுதலான வெப்பம் மிகுந்த காலமென்று உலக காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
காலநிலைமாற்றம் குறித்த கோப்பன்ஹெகன் மாநாட்டில் உலக வானிலை ஆய்வு அமைப்பும், பிரிட்டனின் வானிலை அலுவலகமும் தமது கண்டுபிடிப்புக்களை சமர்ப்பித்தன.
அவர்கள் வழங்கிய புள்ளிவிபரங்கள் கடந்த 4 பத்தாண்டு காலங்களில் உலக வெப்பநிலை திடமாக அதிகரித்து வந்திருப்பதை காண்பிக்கின்றன.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் மின் அஞ்சல்களை கைப்பற்றி வெளிக்கொணர்ந்த அண்மைய சர்ச்சையின் போது வெளியான வெப்பநிலை பதிவுகள் குறித்தும் அங்கு சில விவாதங்கள் நடந்தன. ஆனால், உலகம் சூடாகின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்று உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறுகின்றது.All the contents on this site are copyrighted ©.