2009-12-09 17:02:22

நாளைய உலகை நம்பிக்கையில் கட்டியெழுப்புவது கிறிஸ்தவர்களின் கடமை - கிறிஸ்தவ வாழ்வு இயக்கத்தின் நிறுவனர்


டிச.09,2009 இன்றைய உலகையும், நாளைய உலகையும் நம்பிக்கையில் கட்டியெழுப்புவது கிறிஸ்தவர்களின் கடமை என்று கிறிஸ்தவ வாழ்வு இயக்கத்தின் (Christian Life Movement) நிறுவனரான லூயிஸ் பெர்னாண்டோ பிகாரி (Luis Fernando Figari) கூறினார். டிசம்பர் 1 முதல் 8 வரை ஈகுவதோர் (Ecuador) நாட்டில் நடந்தேறிய கிறிஸ்தவ வாழ்வு இயக்கத்தின் மூன்றாவது உலக மாநாட்டில் கலந்து கொண்ட அங்கத்தினர்களிடம் திரு பிகாரி இவ்வாறு கூறினார். உலகில் அதிகமாகப் பரவி வரும் மத சார்பற்ற தன்மை, கடவுளையும், மதம் சார்ந்த நன்நெறிகளையும் மக்களிடமிருந்து அகற்றுவதால், மக்கள் நம்பிக்கை இழந்து வரும் போக்கு உருவாகிறது என்றார். இயக்கத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் உலகில் பல இடங்களிலும், பல நிலைகளிலும் நம்பிக்கியையும், ஒப்புரவையும் வலுப்படுத்த வேண்டும் என்று இவ்வியக்கத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வார்த்தைகளை திரு பிகாரி நினைவு படுத்தினார்.All the contents on this site are copyrighted ©.