2009-12-09 17:02:53

இரண்டாம் வத்திக்கன் சங்கத்தின் படிப்பினைகள் தன் வாழ்வை வழிநடுத்துகின்றன வாஷிங்டனில் பணிபுரியும் உயர் அதிகாரி 


டிச.09,2009 கிறிஸ்தவ அடிப்படை விழுமியங்களைக் கடைபிடிப்பதால் இந்த உலகில் கிறிஸ்துவ சாட்சியாக முடியும் என்பதை வலியுறுத்திய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் படிப்பினைகள் தன் வாழ்வை வழிநடுத்துவதாக அமெரிக்காவின் வாஷிங்க்டனில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 42 வயது நிரம்பிய கத்தோலிக்கரான Luis CdeBaca, தான் இரண்டாம் வத்திக்கன் சங்கத்தின் குழந்தை என்றும், தான் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறிய பின், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஏடுகளை இன்னும் ஆழமாகப் படித்து பயன் பெற்றதாகவும், பல சூழ்நிலைகளில் அச்சங்கத்தின் படிப்பினைகளை நடைமுறைபடுத்தியதாகவும் கூறினார். மக்கள் உரிமைக்கான வழக்கறிஞராக மாற வேண்டுமென்ற முடிவை எடுப்பதற்கு இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் படிப்பினைகள் உறுதுணையாக இருந்தன என்று கூறினார் CdeBaca. பல்வேறு பணிகளுக்கென நாடு விட்டு நாடு தொழிலாளிகளை அனுப்பி வரும் நிறுவனங்களில் பல நவீன அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்து அந்நிறுவனங்களுக்குரிய தண்டனையை வழங்குவதற்கு கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகளும், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நிலைப்படும் உறுதுணையாக உள்ளதெனக் குறிப்பிட்டார் திரு. Luis CdeBaca.All the contents on this site are copyrighted ©.