2009-12-09 17:04:13

கத்தோலிக்கப் பள்ளியில், கல்வி உதவி பெற்று பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவன் குற்றவாளியென்பது அதிர்ச்சித் தகவல் - கந்தமால் பகுதியில் பணி புரியும் அருட்தந்தை


டிச.09,2009 கத்தோலிக்கப் பள்ளியில், கல்வி உதவியும், தங்க இடமும் பெற்று பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவன் ஒருவன் குற்றவாளியாக நீதி மன்றத்தில்  ஆஜர் செய்யப்பட்டது தனக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டாக்கி யிருப்பதாக கந்தமால் பகுதியில் பணி புரியும் அருட்தந்தை புதியாடம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சென்ற ஆண்டு கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடைபெற்ற பல்வேறு கொடுமைகளின் போது, அருட்சகோதரி ஒருவர் வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகளைக் காவல் துறையினர் இத்திங்களன்று கைது செய்தனர். குற்றவாளிகளுக்குத் தலைவன் போல செயல் பட்ட Gurumar Patra என்ற இளைஞன் கத்தோலிக்கப் பள்ளியில் படித்தவன் என்றும், தந்தையை இழந்த Gurumar ஐப் பள்ளியில் சேர்க்க வந்த அவனது தாயாரின் நிலையைக் கண்ட அருட்தந்தை புதியாடம் Gurumar க்குத் தேவையான எல்லா உதவிகளையும்  செய்ததாகவும், பள்ளியில் படித்த காலத்தில் Gurumar நன்னடைத்தையுள்ள மாணவனாக இருந்தான் என்றும் கூறினார். கத்தோலிக்கப் பள்ளிகளில் பயின்று வெளியேறும் பல இளையோர் வேலையின்றி திரியும் போது, அடிப்படைவாதக் குழுக்கள் அவர்களைத் தவறான வழிகளில் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தவறான பாதைகளைக் காட்டுவது வேதனைக்குரியதென அருட்தந்தை கூறினார்.All the contents on this site are copyrighted ©.