2009-12-09 16:05:58

திருத்தந்தையின் புதன் போது மறைபோதகம்


திருத்தந்தையின் இப்புதன் பொது மறைபோதகம் 6ஆம் சின்னப்பர் அரங்கிலே இடம் பெற்றது.
மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்து புதன் பொது மறைபோதகங்களில் தொடர்ந்து நோக்கிவரும் நாம், இன்று 12ஆம் நூற்றாண்டின் முக்கிய இறையியலாளரான Deutz ன் Rupert குறித்து நோக்குவோம் என தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை. அதிகாரம் வழங்கும் சடங்கு முறைகளைக் குறித்து பேரரசருக்கும் திருச்சபைக்குமிடையே நிலவிய மோதல்களைக் கண்ட Rupert அவர் காலத்தின் முக்கிய இறையியல் விவாதங்களில் குறிப்பிடத்தகும் பணியாற்றினார். திருநற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் குறித்த உண்மை நிலைகளை வலியுறுத்தி ஆழமாக வாதம் செய்த இவர், பாவத்தின் மூலம் என்பது இறைவிருப்பத்தின் விளைவல்ல. மாறாக, மனிதன் தன் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பிறப்பது என்பதை வலியுறுத்தினார். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வரலாற்றின் பரந்த கண்ணோட்டத்தை உருவாக்கி, இயேசு மனு உரு எடுத்தலின் நோக்கம் குறித்த மத்திய கால வாதங்களில் சிறப்பு பங்காற்றினார் Deutzன் Rupert. திருக்கோவில் கட்டிடம், ஒப்பனை ஆகியவைகளின் பின்னணியில் கன்னிமரியின்  மாண்பு மற்றும் சிறப்புக்கொடைகள் பற்றிய Rupertன் படிப்பினையானது, பிற்கால இறையியலில் தன் பாதிப்பைக் கொண்டிருந்தது மட்டுமல்ல, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கப் போதனைத் தொகுப்புகளிலும் எதிரோலித்திருப்பதைக் காணலாம். விசுவாச மறையுண்மைகள் குறித்த பகுத்தறிவு வாதங்களை ஜெபத்தொடும் தியானத்தொடும் இணக்கமாய் கொண்டு செல்ல வல்ல அவரின் திறமையானது, அவர் காலத்தின் துறவுமட இறையியலின் சரியான பிரதிநிதியாக அவரை நமக்குக் காட்டுகிறது. வரலாறு முழுவதும் மற்றும் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நம்மோடு இயேசு உள்ளார் என்பது குறித்த அறிவில் நாம் மகிழ்வும்,  திருநற்கருணையிலும் நற்செய்தி வார்த்தைகளிலும் பிரசன்னமாகியிருக்கும் இயேசுவின் அருகே நாம் செல்லவும் இறையியலாளர் Rupertன் எடுத்துக்காட்டு நம்மைத் தூண்டுகிறது. இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.All the contents on this site are copyrighted ©.