2009-12-08 17:09:41

மலேசியாவில் தலத் திருச்சபை உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் - ஆயர் Paul Tan Chee Ing


டிச.08,2009 இஸ்லாமிய மயமாக்கல் அதிகரித்துவரும் மலேசியாவில் தலத் திருச்சபை மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதுடன், இஸ்லாமியரல்லாதவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் Paul Tan Chee Ing.
இஸ்லாமியத்தை அனைத்து மலேசிய மக்களின் வாழ்விலும் படிப்படியாக புகுத்த முனையும் அரசு, அரசியமைப்பிலும் அதனை நுழைத்து வருவதாகக் குற்றம் சாட்டிய மலேசியாவின் Malaka-Johor ஆயர், கிறிஸ்தவப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கிறிஸ்தவரல்லாதவர்களாக நியமிக்கப்படுவதாகவும் உரைத்தார்.
பிற மதத்தினருடனும், இஸ்லாமியர்களுடனும் மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு மலேசியத் திருச்சபை எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார் ஆயர் Chee Ing. 2 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் 60 விழுக்காட்டினர் இஸ்லாமியர், 9 விழுக்காட்டினரே கிறிஸ்தவர் ஆவர்.







All the contents on this site are copyrighted ©.