2009-12-08 17:06:12

நம்பிக்கைச் செய்தி:
ஓர் உயிர் கருவில் உருவானது முதல் வாழ்வதற்கான உரிமையைக் கொண்டது இத்தாலிய பாராளு மன்றத்தில் சட்டப் பரிந்துரை


டிச.08,2009 ஓர் உயிர் கருவில் உருவானது முதல் வாழ்வதற்கான உரிமையைக் கொண்டது என்பதை வலியுறுத்துவதாக அண்மையில் இத்தாலிய பாராளு மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டப் பரிந்துரை உள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தினரும் வாழ்வுக்கு ஆதரவான இயக்கத்தின் தலைவருமான Carlo Casini இத்தாலிய பாராளு மன்றத்தில் முன்வைத்துள்ள இச்சட்டப் பரிந்துரை, பல பாராளு மன்ற அங்கத்தினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
கருகலைத்தலுக்கான அனுமதி இத்தாலியில் வழங்கப்பட்டுள்ளபோதிலும், கருவில் உருவான உயிரின் மாண்பை மதிக்கவும், கருகலைத்தலை, கருத்தடை சாதனம் போல் பயன்படுத்துவதைத் தடுக்கவும், இப்புதிய சட்டப் பரிந்துரை உதவும் என்றார் பாராளு மன்ற அங்கத்தினர் Maurizio Gasparri.கருவில் உள்ள சிசுக்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை ஓர் அரசியல் போராட்டமாக வெளிக் கொணர உள்ளதாகக் கூறினார் இச்சட்டப் பரிந்துரையை முன்வைத்துள்ள Casini.







All the contents on this site are copyrighted ©.