2009-12-08 17:09:55

நல ஆதரவு சீரமைப்புத் திட்டங்களில் இருந்து கருகலைத்தல் என்பது விலக்கிவைக்கப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தத்திற்கு அமெரிக்கா ஆயர்கள் ஆதரவு


டிச.08,2009 நல ஆதரவு சீரமைப்புத் திட்டங்களில் இருந்து கருகலைத்தல் என்பது விலக்கிவைக்கப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ள அமெரிக்கா ஆயர்கள், இதற்கென செனட் அவை அங்கத்தினர்களை வாக்காளர்கள் வலியுறுத்த வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
சில செனட் அவை அங்கத்தினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இச்சட்டதிருத்த பரிந்துரைக்குத் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ள ஆயர்கள், இச்சட்டத் திருத்தம் அரசின் நிதி கருக்கலைத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்குமே ஒழிய, கருகலைத்தலுக்கான அனுமதியைத் தடை செய்யாது எனவும் கூறியுள்ளனர். மக்களின் வரிப்பணம், கருகலைத்தலுக்கென செலவழிக்கப்படுவதைத் தடுத்து, அது நல ஆதரவுத் திட்டங்களில் பயன்படுத்தப்படுவதையே ஆதரிப்பதாகவும் அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.All the contents on this site are copyrighted ©.