2009-12-08 17:09:22

மத நம்பிக்கைகளுக்காக சித்ரவதைகளை அனுபவித்தவர்களுள் அதிகமானோர் கிறிஸ்தவர்கள் - Aid to the Chruch in Need ஆண்டறிக்கை


டிச.08,2009 இவ்வாண்டு உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளுக்காக சித்ரவதைகளை அனுபவித்தவர்களுள் 80 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என Aid to the Chruch in Need என்ற அமைப்பின் ஆண்டறிக்கைத் தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் 200 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்வதாகவும், இவர்களின் எண்ணிக்கை மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் கூறும் இவ்வமைப்பின் அறிக்கை, இவ்வதிகரிப்பை விரும்பாத குழுக்களே கிறிஸ்தவர்களைச் சித்ரவதைப் படுத்துவதில் ஈடுபடுவதாகவும் கூறுகிறது.ஈராக் திருச்சபை மறை சாட்சிகளின் திருச்சபையாக வாழ்வதாகவும் அதன் வருங்காலம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் கூறும் Aid to the Church in Need அமைப்பு இவ்வாண்டில் பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொடுமை படுத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டுகிறது.All the contents on this site are copyrighted ©.