2009-12-08 17:06:53

அமல உற்பவ அன்னை திருவிழாவன்று மூவேளை ஜெப உரை வழங்கினார் திருத்தந்தை 


டிச.08,2009 திருச்சபையில் இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அமல உற்பவ அன்னை திருவிழாவை முன்னிட்டு நண்பகல் மூவேளை ஜெப உரை வழங்கியத் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், விவிலிய தொடக்க நூலின் 3ஆம் அதிகார நிகழ்வுகளையும், கன்னி மரிக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்ட லூக்கா நற்செய்தி பகுதியையும் எடுத்துக்கூறி, ஒப்புமைபடுத்தி உரையாற்றினார்.
உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன், அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும் என்ற கடவுளின் வார்த்தைகள், இயேசுவின் தாயாம் மரியில் நிறைவேறின என்ற பாப்பிறை, முதல் பெற்றோராகிய ஆதாம், மற்றும் ஏவாளைப் போல் இல்லாமல், இறைவார்த்தைக்கு முற்றிலும் கீழ்படிந்தவராய் அன்னைமரி இருந்தார் என்றார்.வாழ்வோர் அனைவரின் தாயம் புதிய மரியாள் நோக்கி நம் துன்பகாலங்களில் திரும்பும் போது, ஒளியையும் அமைதியையும் பெறுகின்றோம் என்ற அவர், திருச்சபையும் இவ்வுலகின் எதிர்மறை விளைவுகளால் தாக்கப்படும் போது, அவ்வன்னையிலேயே இறைவனை நோக்கிய பாதையின் ஒளியைப் பெறுகின்றது என மேலும் கூறினார்.All the contents on this site are copyrighted ©.