2009-12-08 17:08:45

இஸ்லாமிய கலாச்சாரத்தோடு இணைப்பு பாலம் உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை - கர்தினால் John Foley


டிச.08,2009 மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களைச் சுற்றியுள்ள கலாச்சாரங்களைக் கொண்டு இணைப்பு பாலங்களைக் கட்ட வேண்டுமென அழைப்பு விடுத்தார் கர்தினால் John Foley
"புனித பூமியிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமளவில் வெளியேறி வருவது, நீடித்த அமைதிக்கான சவால்" என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Foley கிறிஸ்தவம் என்பது எந்த ஒரு கலாச்சாரத்தோடும் தன்னை முடக்கிக் கொள்ளக் கூடாது, மாறாக, எல்லா கலாச்சாரத்திலும் தன்னை ஒன்றிணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றார்.
மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், ஐரோப்பிய கலாச்சாரத்தோடு தங்களை அடையாளம் கண்டு கொள்வதால், அது இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு எதிரான ஒன்றாகத் தெரிவதாக அறிவித்த கர்தினால், மேற்கித்திய பாணிகளை ஒட்டியதாய், கிறிஸ்தவம் செயல் பட வேண்டும் என எண்ணுவது தவறு என்றார். இரு பக்கமும் உள்ள நல்லவைகளை உயர்த்திப்பிடித்து, இஸ்லாமிய கலாச்சாரத்தோடு இணைப்பு பாலம் ஒன்றை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை என கூறினார் கர்தினால் Foley.All the contents on this site are copyrighted ©.