2009-12-08 17:08:31

குருக்களுக்கென தனிச்செய்தி - கர்தினால் விதயாத்தில்


டிச.08,2009 சமூகத்தில் குருக்களுக்கான மரியாதை குறைந்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் வர்கி விதயாத்தில்.
Syro Malabar ரீதியின் தலைவரான கர்தினால் விதயாத்தில், அந்த ரீதி பங்கு தளங்கள் அனைத்திற்கும் அனுப்பியுள்ளச் செய்தியில் விசுவாசிகள் அனைவரும் குருக்களுக்காகச் செபிக்க வேண்டும் எனவும், அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.
அனைத்து குருக்களுக்குமென அனுப்பியுள்ள தனிச்செய்தியில், ஒவ்வொரு குருவும் தங்கள் குருத்துவ வாழ்வில் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக விளங்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் அவர்.உலகம் முழவதும் இன்றைய குருக்களிடையே நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம் அதிகமாகக் காணப்படுவதால், கர்தினால் விதயாத்திலின் இந்த வருத்தம் நியாயமானதே என்றார் Syro Malabar ரீதியின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் குரு Paul Thelakat.All the contents on this site are copyrighted ©.