2009-12-07 16:37:47

திருவருகைக்கால சிந்தனை


திருவருகைக்கால சிந்தனை வழங்குபவர் அருட்சகோதரர் ரோச் சே.ச

RealAudioMP3
உன் இதயக்குடில் அதற்குத் தயாரா?
பிறப்பை வைத்து மனிதர்களைப் கூறுபோடுகிறச் சமுதாயத்திலே ஒருவர் பிறக்கின்ற இடம் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. விடுதி பணக்காரர்களின் சரணாலயமாகவும், தற்காலிக இருப்பையும் உணர்த்துகிறது. இயேசு பிறந்தது 'ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க, சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்Nறூh பார்வை பெறுவர் என முழக்கமிட, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்ப, ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்க' (லூக் 4:18-19). எனவே இயேசு நிச்சயமாக விடுதியில் பிறக்க முடியாது. இயேசு இவ்வுலகிற்கு வந்தது தற்காலிகமாக நம்மோடு இருந்துவிட்டு செல்ல அல்ல. மாறாக நிரந்தரமாக உலகம் முடிவுவரை எந்நாளும் நம்மோடு தங்குவதற்கே (மத்.28:20). இப்படிப்பட்ட இயேசு விடுதியில் பிறக்க முடியாது. மாட்டுத் தொழுவத்தில் இயேசுவின் பிறப்பு அவரது மீட்புப்பணியை மிகப் பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது. மாடுகள் பணி புரியவே இருக்கின்றன. இயேசு தான் இவ்வுலகில் பிறப்பது தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாக தொண்டு ஆற்றுவதற்கும், எல்லாருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே (மாற் 10:45) என்பதை முன்கூட்டியே சொல்கிறது இந்த மாட்டுத்தொழுவம். துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட பாலன் இயேசு (லூக் 2:7) தான் பசித்தோருக்கு பரிவன்போடு உணவு தருவதோடு, தானே உணவாகவும் வருவதைக் காட்டுகிறார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே, இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்' (யோவா 6:51) என்பதை இயேசு தீவனத்தொட்டியில் கிடத்தப்படுவது உணர்த்துகிறது. கொடுக்கின்ற எளிய மனமே அவர் நாடும் குடில். உன் இதயக்குடில் அதற்குத் தயாரா?







All the contents on this site are copyrighted ©.