2009-12-07 18:37:14

கோபன்ஹாகன் தட்பவெப்பநிலை மாற்ற கருத்தரங்கு ஒவ்வொருவரின் வாழ்வு முறை மாற்றத்திற்கும் அழைப்பு அருட்தந்தை Federico Lombardi


டிச.07,2009 கோபன்ஹாகன் தட்பவெப்பநிலை மாற்ற கருத்தரங்கு இடம் பெறுவதற்கான காரணிகள் ஒவ்வொருவரின் வாழ்வு முறை மாற்றத்திற்கும் அழைப்பு விடுப்பவைகலாக உள்ளன என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு Federico Lombardi.
'Octava Dies' என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கோபன்ஹாகன் கருத்தரங்கு குறித்து தன் கருத்துக்களை வழங்கிய திருப்பீடப் பேச்சாளர், தட்பவெப்ப நிலை மாற்றங்களால் பஞ்சமோ, இயற்கைப் பேரழிவோ ஏற்படும்போது முதலில் பாதிக்கப்படுவது ஏழைகளே என்ற நிலையில், பூமியின் நலனுக்கான பாதுகாப்பு என்பது ஏழைகளுக்கான பாதுகாப்பு என்பதாகிறது என்றார்.
கடல் மட்டம் உயர்தல், சுத்தக் குடிநீரின் அளவு குறைதல், புயல் காற்று வீசுதல், மண் அரிப்பு, நிலம் பாலைவனமாதல், விவசாயமும் மனித நலனும் பாதிக்கப்படுதல் என பலவும் மனிதனின் பழக்க வழக்கங்களையும் தீர்மானங்களையும் சார்ந்தே உள்ளன என உரைத்தார் இயேசு சபை குரு Lombardi உலகத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளும், தனி மனிதர்கள் பொறுப்புகளை உணர்ந்து அவைகளை அமுல்படுத்தும் நிலையிலேயே வெற்றியைக் காணும் எனவும் கூறினார் திருப்பீடப் பேச்சாளர்.







All the contents on this site are copyrighted ©.