2009-12-07 16:29:39

உலக வெப்பநிலை குறித்த ஐ.நா. மாநாடு அதிகரித்து வரும் இப்புவியின் வெப்பத்தை மட்டுப்படுத்தும் வழிகளை ஆராய விரும்புகின்றது : திருத்தந்தை


டிச.07,2009 ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்திங்களன்று கோப்பன்ஹாகனில் தொடங்கியுள்ள உலக வெப்பநிலை குறித்த ஐ.நா. மாநாடு வெற்றிகரமாக நடைபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். RealAudioMP3

இம்மாநாடு, அதிகரித்து வரும் இப்புவியின் வெப்பத்தை மட்டுப்படுத்தும் வழிகள் குறித்து ஆராய விரும்புகின்றது என்ற அவர், இப்புவியைப் பாதுகாப்பதற்கான வழியில், கடவுளின் சட்டங்கள் மதிக்கப்படுவது மற்றும் மனித வாழ்வின் ஒழுக்கநெறிக் கூறு இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

படைப்பை அதன் கூறுபடா நிலையில் பாதுகாப்பதற்கு, மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்ற வேண்டும், சிறப்பாக ஏழைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும், இந்த ஒரு கண்ணோட்டத்தில் செயல்படும் போது இந்தக் கருத்தரங்கு முழுமையாய் வெற்றி அடையும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஐ.நா. மாநாட்டின் பணிகள், படைப்பை மதிக்கும் செயல்களை இனம் பிரித்து காட்டும் மற்றும் மனித மாண்பை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும், பொது நலனுக்காகச் செயல்படுவதாய் இருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்தார்.

இயற்கையில் கடவுளால் அமைக்கப்பட்ட சட்டங்களை மதிக்கவும் மனித வாழ்வின் அறநெறிக் கூறை மீண்டும் கண்டுணரவும் நன்மனம் கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

 
All the contents on this site are copyrighted ©.