2009-12-07 18:37:34

கென்யா தலைநகரின் கழிவுக் கிடங்குகளை அகற்ற கிறிஸ்தவ சபைகள் அழைப்பு


டிச.07,2009 பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நலக்கேட்டிற்கு காரணமாகும் கென்யா தலைநகரின் Dandora கழிவுக் கிடங்குகளை உடனே அகற்ற வேண்டும் என அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
தலைநகர் Nairobi யின் Dandora என்ற பகுதியில் நகரின் குப்பைகளைக் கொட்டி வைப்பதால், அப்பகுதி மக்களின் நலன் பாதிக்கப் படுவதாக கவலையை வெளியிட்ட கிறிஸ்தவ சபைகள், குப்பைகள், மக்கள் குடியிருப்பற்ற பகுதிகளில் கொட்டப்படுதல், குப்பைகளின் மறு பயன்பாடு குறித்து சிந்தித்தல், Dandora பகுதியின் சுகாதாரச் சீர்கேட்டை அகற்றல் போன்றவை குறித்து நகராட்சி தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. 40 லட்சம் மக்களைக் கொண்ட Nairobi யின் குப்பைகள் என ஒவ்வொரு நாளும் 2000 டன் கழிவுகள் Dandora பகுதியில் கொட்டப்படுவதாகச் செய்தி நிறுவனங்கள் உரைக்கின்றன.All the contents on this site are copyrighted ©.