2009-12-07 18:37:00

கொழும்பு பெருமறைமாவட்டத்தின் கோவில் ஒன்று ஞாயிறு காலை தாக்கப்பட்டது


டிச.07,2009 கொழும்பு பெருமறைமாவட்டத்தின் கோவில் ஒன்று ஞாயிறு காலையில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கத்தோலிக்கர்கள் ஒன்றிணைந்து தலைநகர் தெருவில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
ஆயுதம் தாங்கிய ஏறத்தாழ 200 பேர் Groos Watta வின் மரியன்னை கோவிலினுள் இஞ்ஞாயிறு காலை 7மணி திருப்பலிக்குப்பின் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியதுடன் பங்கு குருவின் வாகனத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
புத்தமத தீவிரவாதிகளால் இது நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட ஏறத்தாழ 500 கத்தோலிக்கர்கள் ஒன்றிணைந்து முக்கிய சாலையை மறித்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். உச்சமன்ற அனுமதியுடன் இடம்பெற்று வரும் மரியன்னைக் கோவிலின் விரிவாக்கப் பணிகளைத் தடுக்க நினைக்கும் புத்தமதத் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தி யிருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார் பங்கு குரு லட்சுமணன்.All the contents on this site are copyrighted ©.