2009-12-05 16:05:34

திருத்தந்தை, ஜெர்மன் அரசுத்தலைவர் சந்திப்பு


05டிச.2009 ஜெர்மன் அரசுத்தலைவர் ஹவுஸ்ட் கோலேரை வத்திக்கானில் இச்சனிக்கிழமை தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்..

ஜெர்மன் கூட்டுக் குடியரசு உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு மற்றும் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தைக்கென இவ்வெள்ளி மாலை வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் ஜெர்மன் இசைக்குழு ஒன்று நடத்திய இசை விழாவில் ஜெர்மன் அரசுத்தலைவர் ஹவுஸ்ட் கோலேர் Horst Kohler உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கு பெற்றனர்.

ஜெர்மன் பிரதிநிதி குழுவுடன் இச்சனிக்கிழமை வத்திக்கான் சென்ற ஹோக்லர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தியையும் சந்தித்தார்.

இச்சந்திப்புக்கள் பற்றி செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், ஜெர்மனியின் இப்போதைய இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள், தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு, குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து பேசப்பட்டதாகத் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.