2009-12-05 16:31:10

நம்பிக்கை செய்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் ஒன்றிணைந்த அமைதிக்கான ஊர்வலம்


05டிச.2009 இந்தியாவில் அயோத்தியாவிலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து அமைதிக்கான ஊர்வலம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

இந்த பல்சமய ஊர்வலமானது அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்தியை வெளிப்படுத்த விரும்புவதாக ஆசிய செய்தி நிறுவனம் மேலும் கூறியது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆயிரக்கணக்கான இந்துத்துவ தீவிரவாதிகளால் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது.

சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இந்து தீவிரவாதிகள் இதனைச் செய்தனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

இதற்கிடையே, இந்த நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி நாடெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறியுள்ளன.
All the contents on this site are copyrighted ©.