2009-12-05 16:28:58

ஐ.நா.பொதுச் செயலர்-தன்னார்வப் பணி என்பது, சமூகக் கட்டமைப்பு, உறுதி, தோழமை, இணக்க வாழ்வு ஆகியவற்றின் ஊற்றாக இருக்கின்றது


05டிச.2009 உலக தன்னார்வப் பணியாளர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், தன்னார்வப் பணி என்பது, சமூகக் கட்டமைப்பு, உறுதி, தோழமை, இணக்க வாழ்வு ஆகியவற்றின் ஊற்றாக இருக்கின்றது என்று கூறினார்.

இப்புவியைப் பாதுகாப்பதற்கும் இதற்கான ஐ.நா. பணிகளுக்கு உதவுவதற்குமென உலகெங்கும் பங்காற்றும் தன்னார்வப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை இந்நாள் கோடிட்டுக் காட்டுகின்றது என்றும் பானின் செய்தி கூறுகின்றது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தங்களது நேரத்தைச் செலவழிக்கும் தன்னார்வப் பணியாளர்களுக்கு, குறிப்பாக இப்பணிகளில் ஐ.நா.வுக்கு உதவி வரும் சுமார் எட்டாயிரம் தன்னார்வப் பணியாளர்களுக்கு நன்றி சொல்வதாகவும் ஐ.நா.பொதுச் செயலர் தனது செய்தியில் கூறியுள்ளார்.

இப்பூமிப்பந்தைக் காப்பாற்றுவதற்கும், உலகின் வெப்பநிலை மாற்ற விவகாரத்துக்கும் உதவுவதற்குத் தற்சமயம் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட மணி நேரத்தை இப்பணியாளர்கள் செலவழிக்கின்றார்கள் என்று ஐ.நா. கூறியுள்ளதுAll the contents on this site are copyrighted ©.