2009-12-05 16:26:53

தன்னார்வப் பணியாளர்கள் நாம் வாழும் இக்காலத்திற்கான நம்பிக்கையின் அடையாளங்கள்- பேராயர் மர்க்கெத்தோ


05டிச.2009 தன்னார்வப் பணியாளர்கள் நாம் வாழும் இக்காலத்திற்கான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறார்கள் என்று திருப்பீட குடியேற்றதாரர் அவையின் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.

உரோமையில் இச்சனிக்கிழமை நடைபெற்ற, சர்வதேச தன்னார்வப் பணியாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, மனித முன்னேற்றம், குடியேற்றதாரர் நிலைமை ஆகிய தலைப்புகளில் கருத்துக்களை முன்வைத்தார்.

முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் மனிதனின் ஒவ்வொரு கூறும் நோக்கப்பட வேண்டும் என்றும் பேராயர் வலியுறுத்தினார்.

டிசம்பர் 5, சர்வதேச தன்னார்வப் பணியாளர் தினம். இந்நாளில் ஆண்டுதோறும், சர்வதேச கிறிஸ்தவ தன்னார்வப் பணியாளர்களின் கூட்டமைப்பு, விருது வழங்கி தன்னார்வப் பணியாளர்களை ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.