2009-12-05 16:35:07

கோப்பன்ஹாகன் மாநாட்டுத் தீர்மானங்கள் பலவீனமாக இருந்தால், அவை ஏழை நாடுகளில் மேலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்- CAFOD


05டிச.2009 வருகிற திங்களன்று கோப்பன்ஹாகனில் தொடங்கவிருக்கும் வெப்பநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டின் தீர்மானங்கள் பலவீனமாக இருந்தால், வெப்பநிலை மாற்றத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை நாடுகள் கடுமையான விளைவுகளை எதிர் நோக்கும் என்று CAFOD அமைப்பு எச்சரித்துள்ளது.

இவ்வுலக மாந்ட்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள CAFOD அமைப்பின் இயக்குனர் Chris Bain, சட்டத்தால் கட்டுப்படுத்தும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உலக வெப்பநிலை மாற்றம், பங்களாதேஷ், கெனயா போன்ற நாடுகளின் வளர்ச்சியை பாதித்து வருவதாகக் கூறும், பிரிட்டனின் பிறரன்பு நிறுவனமான காப்போடு, தொழிற் வளர்ச்சியடைந்த நாடுகள், 2002ம் ஆண்டுக்குள் கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைந்தது 40 விழுக்காடு குறைப்பதற்கு முன்வரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவர் ஒபாமா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
All the contents on this site are copyrighted ©.