2009-12-04 17:05:55

கார்பன் வாயுக்களின் அடர்த்தியை 2020 ஆம் ஆண்டில், 20 முதல் 25 விழுக்காடு வரை குறைக்க இந்தியா முடிவு


டிச.04,2009 இப்பூமியை வெப்பமடையச் செய்யும் கார்பன் வாயுக்களின் அடர்த்தியை 2020 ஆம் ஆண்டில், 20 முதல் 25 விழுக்காடு வரை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம், கார்பன் வாயுக்களின் அடர்த்தியை 40 முதல் 45 விழுக்காடு வரை குறைக்கப் போவதாக சீனா அறிவித்த நிலையில், இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோபன்ஹாகனில் வருகிற திங்களன்று துவங்கும் புவியை வெப்பமடையச் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாக இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
All the contents on this site are copyrighted ©.