2009-12-04 17:03:31

இறையியல் வல்லுனர் அருட்தந்தை ஜோசப் நாயினர் சே.ச., தனது 101வது வயதில் இறைபதம் அடைந்தார்


டிச.04,2009 இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னர் திருச்சபையின் புதுப்பித்தலில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்ட இறையியல் வல்லுனர் இயேசு சபை அருட்தந்தை ஜோசப் நாயினர், தனது 101வது வயதில் டிசம்பர் 3, இவ்வியாழன் இரவு 11.15 மணிக்கு இறைபதம் அடைந்தார்.

அவரின் அடக்கச் சடங்கு இவ்வெள்ளியன்று நடை பெற்றது. பூனே, ஞான தீப வித்யபீத் எனப்படும் இயேசு சபையினரின் இறையியல் கல்லூரிக் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆஸ்ட்ரிய நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை ஜோசப் நாயினர், 1938ம் ஆண்டு இந்தியா வந்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் இறையியல் கற்பித்துள்ளார். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப் பெற்ற நான்கு இறையியல் வல்லுனர்களில் இவரும் ஒருவர்.

திருத்தந்தை ஆறாம் பவுல் 1964ம் ஆண்டு திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்ள மும்பைக்கு வந்த பொழுது இந்து மதத்தவருக்கு அவர் ஆற்றிய உரையை வரைவு செய்தவர் அருட்தந்தை ஜோசப் நாயினர் ஆவார்.
All the contents on this site are copyrighted ©.