2009-12-03 16:03:51

கங்கை நதியைத் துப்புரப்படுத்தும் பணிக்கு நூறு கோடி டாலர் கடனுதவி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது


டிச.03,2009 கங்கை நதியைத் துப்புரப்படுத்தும் பணிக்கு நூறு கோடி டாலர் நிதியைக் கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் கங்கையை முற்றிலும் துப்புரவாக்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல நூறு கோடி டாலர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கடனுதவி வழங்கப்படுவதாக புது டில்லியில் இப்புதனன்று உலக வங்கியின் தலைவர் Robert Zoellick செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கங்கை நதியைத் துப்புரவாக்கும் பல முயற்சிகள் இதுவரை எடுத்துள்ள போதிலும் அவை குறிப்பிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்ச்சிகள் என்றும், இப்போது எடுக்கப்படவுள்ள முயற்சி மாபெரும் இந்நதியின் பல்வேறு பிரச்சனைகளை மனதில் கொண்டு வகுக்கப்படும் என்றும் கூறினார் திரு Zoellick. இந்திய நிதித் துறை சார்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் இந்தியாவின் பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு உலக வங்கி சுமார் 700 கோடி டாலர்கள் கடனுதவி வழங்க உள்ளதாகத் தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.