2009-12-03 15:38:25

வரும் ஆண்டின் உலக நோயாளர் தினத்திற்கான செய்தியை வெளியிட்டுள்ளார் பாப்பிறை


டிச.03,2009 எளியோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் பணியாற்ற வேண்டியதன் தேவையை வலியுறுத்தியதுடன், சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட உயர் அன்பின் முன்னோடியாகத் தன் சீடர்களின் பாதங்களையும் கழுவிய இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, ஒவ்வொரு கிறிஸ்தவரும் நல்ல சமாரித்தான் உவமையை மீண்டும் வாழ்ந்து காட்ட அழைக்கப்பட்டுள்ளார்கள் என செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்.
வரும் ஆண்டு பெப்ரவரி 11ஆம் தேதி லூர்து அன்னை திருவிழாவின்போதான உலக நோயாளர் தினக் கொண்டாட்டங்களுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, இயேசுவின் நல்ல சமாரித்தான் உவமையை மேற்கோள் காட்டி அவ்வுவமையின் இறுதியில் இயேசு திருச்சட்ட அறிஞனை நோக்கி "நீரும் போய் அப்படியே செய்யும்" எனக் கூறியது நம் ஒவ்வொருவருக்குமான விண்ணப்பம் என எடுத்துரைக்கின்றது. நோயாளிகளுக்கான பணியில் கிறிஸ்தவ வரலாற்றில், எண்ணற்ற திருச்சபை அமைப்புகளும் துறவுச் சபைகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறித்து அவர்களுக்கான நன்றியையும் வரும் ஆண்டின் உலக நோயாளர் தினத்திற்கான செய்தியில் வெளியிட்டுள்ளார் பாப்பிறை.All the contents on this site are copyrighted ©.