2009-12-03 16:02:46

அகதிகள் முகாம்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறுவதில் உள்ள சில பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் கொழும்பு பேராயர்


டிச.03,2009 அகதிகள் முகாம்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறுவதற்கு இச்செவ்வாயன்று அரசு அனுமதி வழங்கியதில் உள்ள சில பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித். ஒரு லட்சத்திற்கும் மேலான இவ்வகதிகள் முகாம்களை விட்டு வெளியேறுமுன், அவர்கள் தங்கச் செல்லும் தமிழ் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அரசு முயல வேண்டும். இல்லையேல் அது அத்தமிழர்களின் உயிருக்கும், உடலுக்கும் ஆபத்து என்று கூறினார் பேராயர் ரஞ்சித். இதேபோல் கடந்த பல ஆண்டுகளாக நடந்த போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவயது வீரர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மனரீதியாகத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதும் அரசின் தலையாயக் கடமையென்றும் சுட்டிக்காட்டினார் பேராயர். இந்த நடவடிக்கைகளை அரசு வெகு விரைவில் செய்வதை உலகின் பல அரசுகளும் நிர்பந்திக்க வேண்டும் எனவும் பேராயர் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்தார். கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த இப்போரின் போது அரசும் மற்றவர்களும் தங்களிடையே இருந்த அடிப்படை வாதக் குழுக்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் இருந்திருந்தால், இப்பிரச்சனைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ரீதியான முடிவுகளைக் கண்டிருக்கலாம் என்றும் பேராயர் தன் கருத்தைக் கூறினார்.All the contents on this site are copyrighted ©.