2009-12-03 15:38:55

நம்பிக்கைச் செய்தி குற்றவாளியைப் புனிதராக்கும் முயற்சி


டிச.03,2009 இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை கொலைகுற்றம் சாட்டப்பட்டு இறந்த குற்றவாளியின் சகோதரியான Monique Fesch என்ற பெண்மணியைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Monique Fesch ன் தம்பி Jacques Fesch 1957ஆம் ஆண்டு பாரிசில் ஒரு காவல்துறை அதிகாரியைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டார். சிறையில் இருந்த போது, Jacques முற்றிலும் மனம் மாறி, ஆன்மீக வழியில் அதிகமான ஆழம் கண்டார். இவரது மனமாற்றம் குறித்தும் இவர் அடைந்த ஆன்மீக ஆழம் குறித்தும் அறிந்த பாரிசின் முன்னாள் பேராயர் கர்தினால் Jean Marie Lustiger இவரைப் புனிதராக்கும் முயற்சியை 1993ல் ஆரம்பித்து வைத்தார். Jaquesன் சகோதரியைத் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்த கர்தினால் அஞ்சேலோ கொமாச்த்ரி (Angelo Comastri), தான் ரோமையில் சிறையிடப்பட்டோரின் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது Jacques Fesch ன் மனமாற்றத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் பற்றி அறிந்ததாக, திருப்பீடச் செய்தித்தாள் L'Osservatore Romanoவுக்குக் கூறினார். சிறையிலிருந்த போது Jacques எழுதிய கடிதங்களை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய Ruggiero Francavilla திருத்தந்தையிடம் இப்புதனன்று காண்பித்தார்.All the contents on this site are copyrighted ©.