2009-12-03 16:03:11

ஆப்கானிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் ஒரு சேர தருகின்ற ஒரு செயல்


டிச.03,2009 இச்செவ்வாயன்று ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் 30,000 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளது நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் ஒரு சேர தருகின்ற ஒரு செயல் என்று அமெரிக்காவின் Pax Christi என்ற கத்தோலிக்க அமைப்பின் தலைவர் David Robinson தெரிவித்தார். ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் இந்த அறிவிப்பைத் தந்துள்ளது கேள்விக்குறிகளையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறதென அவர் மேலும் குறிப்பிட்டார். ஒபாமா ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து துருப்புகளும் 2011 ஆம் ஆண்டு வெளியேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் வீரர்களை அங்கு அனுப்புவதனால் என்ன பயன் என்பது விளங்கவில்லை என்று திரு ராபின்சன்   தெரிவித்தார். இதே கருத்துக்களை அமெரிக்காவின் பல்வேறு கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்புகள் வெளியிட்டுள்ளன.All the contents on this site are copyrighted ©.