2009-12-02 15:36:10

வத்திக்கான் வானொலிக்குப் பேட்டி அளித்தார் பேராயர் மர்கெத்தோ


டிச.02,2009 சாலை பாதுகாப்பு குறித்து ஐ.நா.அமைப்பும், ரஷ்ய அரசும் நவம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சாலை விபத்துக்கள் மட்டுமல்லாது, வீடுகளில்லாமல் சாலையோரங்களில் வாழ்கின்ற கோடிக்கணக்கானோரையும் குறித்து, சிறப்பாக பெண்கள், குழந்தைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதென இக்கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பாகக் கலந்து கொண்ட பேராயர் அகோஸ்தினோ மர்கெத்தோ கூறினார்.

இக்கருத்தரங்கு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டி அளித்த பேராயர் மர்கெத்தோ, ஒவ்வொரு நாளும் சாலை விபத்துக்களில் மடியும் 13 லட்சத்திற்கும் மேலானோர், விபத்துக்களில் ஊனமுறும் 5 கோடி மக்கள் இவர்களை எண்ணும் போது, சாலை விபத்துக்கள் ஒரு போர் போன்ற விசுவரூபம் எடுத்துள்ளதென கூறினார். சாலை விபத்து பெரும் பிரச்சனை என்றும் அதற்கு தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவேண்டுமெனவும் அரசுகளும் பல வியாபார நிறுவனங்களும் முன் வந்துள்ளது ஆறுதல் தரும் செய்தி என்று கூறிய பேராயர் மர்கேத்தோ, இந்த முயற்சியில் மதம் சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பை உலக அவைகள் மறைத்து வருவது வருத்தத்தைத்  தருகிறதெனக் கூறினார்.
All the contents on this site are copyrighted ©.