2009-12-02 15:36:45

பாத்திமாவில் மரியன்னை காட்சி அளித்ததை குறித்த திரைப்படம்  வெளியிடப்பட்டது


டிச.02,2009 பாத்திமாவில் மரியன்னை காட்சி அளித்ததை குறித்த ஒரு திரைப்படம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. "பதிமூன்றாம் நாள்" (The 13th Day) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படம், போர்த்துகல், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டு, பல நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப் படத்தை உருவாக்கிய Ignatius Press என்ற இயேசு சபை நிறுவனத்தில் பணி புரியும் திரு அந்தொனி ரயன் (Anthony Ryan) இத்திரைப்படத்தைப் பற்றி கூறுகையில், மரியன்னை பாத்திமாவில் கூறிய செய்திகள் இன்றும் அர்த்தமுள்ளதாகக் காணப்படுகின்றன என்றார்.

இக்னேசியஸ் அச்சகத்தின் தலைவர் திரு மார்க் ப்ரம்ப்லி (Mark Brumbley ) மே மாதம் போர்த்துக்கல் நாட்டிற்கும், பாத்திமாவிற்கும் திருத்தந்தை திருப்பயணம் மேற் கொள்ளவிருக்கும் இச்சூழ்நிலையில்  இத்திரைப்படம் வெளியாகியுள்ளது  மிகப் பொருத்தமான ஒரு முயற்சி என்று குறிப்பிட்டார்.

இத்திரைப்படம் குறித்த மற்ற விவரங்களைத் தெரிந்து  கொள்ள /a> என்ற இணையதள முகவரியை அணுகவும்.
All the contents on this site are copyrighted ©.