2009-12-02 15:50:08

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


டிசம்பர் 03 : கடந்த சில வாரங்களாக புதன் பொது மறைப்போதகத்தின்போது, மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்து உரையாற்றி வரும் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட், இவ்வாரம் புனித Thierry ன் வில்லியம் குறித்து தன் கருத்துக்களை அளித்தார்.

புனித Thierry துறவு இல்லத்தின் William ஒரு புகழ்பெற்ற துறவுமட இறையியலாளராகவும், Clairvoux ன் புனித பெர்னார்டின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். 12 ம் நூற்றாண்டின் துறவுமட புதுப்பித்தல் இயக்கத்தில் உயிர்துடிப்புடைய பங்கேற்பைக் கொண்டிருந்த வில்லியம் முதலில் புனித Thierry துறவுமட அதிபராகச் செயலாற்றியபின் Signy ன் Cistercian துறவுமடத்தில் நுழைந்தார். மனித ஆன்மாவின் உந்து சக்தியாகவும் மிக உன்னத அழைப்பாகவும் நோக்கப்பட்ட அன்பின் சக்தி மற்றும் இயல்பு குறித்தது இவரின் எழுத்துக்களின் மையமாக இருந்தது. வில்லியமைப் பொறுத்தவரையில் மனிதனின் இவ்வுள்ளார்ந்த உந்துசக்தியானது, அனைத்து அன்பின் நோக்கமாகவும் ஆதாரமாகவும் இருக்கும் மூவொரு கடவுளின் அன்பில் தன் முழுமையைக் கண்டு கொள்கிறது. அன்பு, பாச வெளிப்பாடுகள் தூய்மையடைவதிலும் முழுமையடைவதிலுமான பாதையின் மணிமகுடமாக, இறை அன்பானது மிக உன்னத மனித குல நிறைவையும், கடவுள் மற்றும் நம்மைச் சுற்றிய உலகு குறித்த ஆழ்ந்த அனுபவ அறிவையும் தருகிறது. வில்லியமின் புகழ் வாய்ந்த வரிகளான Amos Ipse Intelletus Est என்பது கூறுகிறது, அன்பே அறிவைக் கொணர்கிறது என்று. விசுவாச மறையுண்மைகளை ஆழ்ந்து தியானிப்பதன் வழி, நாம் இறை சாயலில் வளர்கிறோம், மற்றும் நம் விருப்பத்தை அவர் விருப்பத்தோடு இணைப்பதன் மூலம் நாம் அவரோடு ஒன்றாய் மாறுகிறோம். புனித Thierry ன் வில்லியமின் எழுத்துக்களும் எடுத்துக்காட்டும் மற்ற அனைத்தையும் விட இறைவனை மேலாக அன்பு செய்வதற்கான நம் விருப்பத்தைப் பலப்படுத்துவதாகவும், அந்த அன்பானது அயலாருக்கான நம் அன்பில் வழிந்தோடவும் உதவுவதாக.  இவ்வாறு நாம் உண்மையான அன்பையும் முடிவற்ற இன்பவாழ்வின் முற்சுவையையும் கண்டு கொள்வோமாக என தன் புதன் போது மறைப் போதகத்தை வழங்கினார் திருத்தந்தை.

தன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இப்புதனன்று தன் 25 ஆம் ஆண்டு நிறைவைக் கண்ட திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் ஒப்புரவு அருட்சாதனம் குறித்த "Reconciliatio et Paenitentia"  என்ற அப்போஸ்தலிக்க ஏடு குறித்தும் எடுத்துரைத்த பாப்பிறை, ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கியதில் பிரபலமான புனிதர்கள் John Maria Vianney, Joseph Cafasso, Leopoldo Mendic மற்றும் Padre Pio குறித்தும் எடுத்துரைத்தார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
All the contents on this site are copyrighted ©.