2009-12-01 17:04:10

மசூதிகளில் ஜெபக் கோபுரங்களைக் கட்ட  அரசு அனுமதி மறுத்துள்ளது, மதங்களுக்கிடையேயான இணக்க வாழ்வுக்குத் தடையாக இருப்பதாக சுவிட்சர்லாந்து ஆயர்கள் கவலை


டிச.01,2009 சுவிட்சர்லாந்தின் இஸ்லாமியர்கள் தங்கள் மசூதிகளில் ஜெபக் கோபுரங்களைக் கட்ட அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது, மதங்களுக்கிடையேயான இணக்க வாழ்வுக்குத் தடையாக இருப்பதாக கவலையை வெளியிட்டுள்ளனர் சுவிட்சர்லாந்து ஆயர்கள்.

இஸ்லாமியர்களின் மசூதிகளில் உயரமான ஜெபக் கோபுரங்கள் கட்ட அனுமதிக்கலாமா என்ற பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் 58 விழுக்காட்டினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜெபக்கொபுரங்கள் கட்ட அனுமதி மறுத்துள்ளது.

இவ்வனுமதி மறுப்புபற்றிக் குறிப்பிட்ட சுவிட்சர்லாந்து ஆயர்கள், இத்தகைய நடவடிக்கையால், இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கக் கூடிய ஆபத்து உள்ளது என்றனர்.

சுவிட்சர்லாந்தின் நான்கு லட்சம் இஸ்லாமியர்களுக்கென தற்போது ஏறத்தாழ 150 மசூதிகள் உள்ளன. அவற்றில் நான்கிலே உயர்ந்த ஜெபக் கோபுரங்கள் உள்ளன. 








All the contents on this site are copyrighted ©.