2009-12-01 17:03:51

உண்மையான இறையியலார் என்பவர், இறைப் பேருண்மையின் ஆழத்தை அறிவதற்குத் தனது சொந்த அறிவைப் பயன்படுத்தும் சோதனைக்கு உட்படாதவர்- திருத்தந்தை


டிச.01,2009 உண்மையான இறையியலார் என்பவர், இறைப் பேருண்மையின் ஆழத்தை அறிவதற்குத் தனது சொந்த அறிவைப் பயன்படுத்தும் சோதனைக்கு உட்படாதவர் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இச்செவ்வாய் காலை வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள பவுல் சிற்றாலயத்தில் சர்வதேச இறையியல் அவையின் உறுப்பினர்களோடு திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக மாபெரும் வல்லுனர்களும் விசுவாசத் தந்தையர்களும் திருமறை நூலை ஆராய்ச்சியில் செய்தார்கள், அவர்கள் மீட்பு வரலாற்றின் விளக்கங்களில் உட்புகுந்தார்கள், எனினும் கிறிஸ்து உண்மையிலேயே கடவுளின் மகன் என்ற பேருண்மையை அதில் அவர்களால் காண முடியவில்லை என்றும் கூறினார் அவர்.

எனினும் தாழ்ச்சியின் மூலம் பல ஆண்களும் பெண்களும் இந்த உண்மையைக் கண்டறிந்தார்கள் என்பதற்கு திருச்சபையின் வரலாற்றில் நீண்ட பட்டியலே இருக்கின்றது என்ற அவர், புனிதை குழந்தை தெரேசாள், புனித தமியான் தெ வூஸ்டர் போன்றவர்களை எடுத்துக் காட்டாகக் கூறினார்.

உயிர்த்த ஆண்டவர் தமஸ்கு சாலையில் சவுலின் இதயத்தைத் தொட்டார், சவுல் பார்க்க இயாத ஞானிகளில் ஒருவர், அவர் பார்வையை இழந்தார், அதன்மூலம் அவரால் பார்க்க முடிந்தது, இவ்வாறு பெரிய மனிதர்கள் சிறியவர்களானார்கள், இறைவனின் ஞானத்தையும் கண்டார்கள், இது அனைத்து மனித ஞானத்தையும்விட பெரியது என்றும் திருத்தந்தை உரையாற்றினார்.








All the contents on this site are copyrighted ©.