2009-12-01 17:04:48

ஊனமுற்ற மக்களுக்கு ஆதரவு வழங்குமாறு ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்


டிச.01,2009 ஊனமுற்ற மக்களுக்கு ஆதரவு வழங்கி அரவணைக்குமாறு ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டிசம்பர்  3ஆம் தேதி கடைபிடிக்கப்படும் சர்வதேச ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட, ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் ஊனமுற்றோருக்கான ஆணையப் பிரதிநிதி ஆயர் Peter Elliot இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

"ஊனமுற்றோர் மற்றும் அவர்களின் குடும்பங்களை மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் கடைபிடிக்கப்படும் இவ்வுலக தினத்தில், இம்மக்களின் வாழ்வு உயர்வடைய ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் ஆயர் Elliot. ஆஸ்திரேலியாவிலும் உலகிலும் ஊனமுற்றவர்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதாகவும் ஆயரின் செய்தி குறிப்பிடுகிறது. 
All the contents on this site are copyrighted ©.