2009-12-01 17:04:29

வியட்நாம் அரசால் பறிக்கப்பட்ட Da Lat நகர் குருமடத்தைத்  திரும்ப வழங்கவேண்டும் என ஆயர் பேரவைத் தலைவர் வற்புறுத்தல் 


டிச.01,2009 1980ஆம் ஆண்டு தலத்திருச்சபையிடமிருந்து வியட்நாம் அரசால் பறிக்கப்பட்ட Da Lat நகர் குருமடத்தைத்  திரும்ப வழங்கவேண்டும் என அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியட்நாம் ஆயர் பேரவைத் தலைவர்.

இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வந்த பத்தாம் பத்திநாதர் பாப்பிறை குருமடத்தை வியட்நாம் அரசு, தலத்திருச்ச்பைக்குத் திருப்பி வழங்க வேண்டும் என உரைத்த ஆயர் Pierre Nguyen Van Nohn, 1980ஆம் ஆண்டு அரசு அதனை ஆக்கிரமிக்கும் வரை அதன் சொத்துரிமை வியட்நாமுக்கான திருப்பீடத் தூதரகத்திடம் இருந்தது என்றார்.

1964ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்குருமடம் 306 குருக்களும், 14 ஆயர்களும் உருவாகக் காரணமாக இருந்துள்ளது எனவும் கூறினார் ஆயர் Nohn.

1980ஆம் ஆண்டு வியட்நாம் தலத்திருச்சபையிடமிருந்து பறித்த குருமடத்தை இடித்து, அதில் பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளது அரசுAll the contents on this site are copyrighted ©.