2009-12-01 16:53:57

நம்பிக்கை செய்தி- இலங்கை அகதிகள் முகாம்கள் திறப்பு


டிச.01,2009 இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த ஆறு மாதங்களாக அகதிகள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதித்துள்ளது இலங்கை அரசு.

ஏறத்தாழ ஒரு இலட்சத்து 27 ஆயிரம் அகதிகள் வெளியேற இச்செவ்வாயன்று அனுமதி வழங்கிய அரசு, ஏற்கனவே பெருமெண்ணிக்கையிலானோர் கடந்த வாரங்களில் வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்தது.

தமிழ் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேறிச் செல்லலாம், வேறு முகாம்களுக்கு மாறிச் செல்லலாம் அல்லது தற்போதிருக்கும் முகாமிலேயே தங்கலாம் என்றார் இராணுவ அதிகாரி உதய நாநயக்காரா.

ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து அகதிகள் முகாம்களும் மூடப்படும் எனவும் இலங்கை அரசு தெரிவித்தது.
All the contents on this site are copyrighted ©.