2009-12-01 17:04:20

இஸ்லாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நடத்துவதாகக் குற்றம் சாட்டினார் இராக்கின் மோசுல் பேராயர்


டிச.01,2009 ஈராக் கிறிஸ்தவர்களின் கலாச்சார பாரம்பரியத்தையும், இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றையும் ஒழிக்க விரும்பும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நடத்துவதாகக் குற்றம் சாட்டினார் இராக்கின் மோசுல் பேராயர் Basile George Casmoussa.

திருப்பீடச் சார்பு தினத்தாள் L’ Osservatore Romanoவுக்கு பேட்டியளித்த பேராயர்  Casmoussa, சில இஸ்லாமியக் குழுக்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை நிலைகுலைய வைக்க முயல்கின்றன, அதனை மேற்கொள்வதற்கு வலிமையையும், ஜெபமும் தேவைப் படுகின்றன என்றார்.

ஈராக் நாட்டில் அமைதி நிலவும் சூழல் உருவாகி, கிறிஸ்தவர்கள் நாடு திரும்பலாம் என எண்ணும்போது, அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சில இஸ்லாமியக் குழுக்களின் எண்ணமாக உள்ளதென கவலையை வெளியிட்டார் பேராயர் Casmoussa     
All the contents on this site are copyrighted ©.