2009-11-30 16:13:15

திருவருகை காலத்தின் நம்பிக்கை செய்தி –

டெட்ராய்ட் பங்குதளம் கைத்துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்கி ஆயுத களைவிற்கு உதவியுள்ளது


நவ.30,2009 சமூகம் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழவேண்டும் என்ற நோக்கில் மக்களிடம் பயன்பாட்டில் இருக்கும் கைத்துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்கி ஆயுத களைவிற்கு உதவியுள்ளது அமெரிக்கா ஐக்கிய நாட்டின் பங்குதளம் ஒன்று.

அமெரிக்காவின் Detroit மாநிலத்தின் புனித செசிலியா கத்தோலிக்கப் பங்கு தளம், திருவருகைக் காலத்தின் முன்னோடியாக சனியன்று நடத்திய வழிபாட்டில் இக்கைத்துப்பாக்கிகளை மக்களிடமிருந்து பெற்று காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது.

ஆயுதக் களைவிற்கும், தெருக்களில் பாதுகாப்பை உருவாக்கவும் அமைதிக்கும் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றும் பங்கு இது என்று உரைத்த அப்பன்குதள குரு Ted Parker ஒர்றொரு கைத்துப்பாக்கிக்கும் 20 டாலர்களைக் கொடுத்து 75 துப்பாக்கிகளைப் பெற்று காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.