2009-11-30 16:12:20

ஆப்ரிக்காவில் AIDS நோயாளிகள் பராமரிப்பு நடவடிக்கைகளில் 40 விழுக்காடுவரை தலத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது


நவ.30,2009 ஆப்பிரிக்கக் கண்டத்தில் AIDS நோயாளிகள் மீதான பராமரிப்பு நடவடிக்கைகளில் 40 விழுக்காடுவரை தலத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்காவின் AIDS நோயாளிகளுடனான பணிக்கான இயேசு சபை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் AIDS நோயாளிகளுக்கான பணியில் ஆப்ரிக்காவில் 40 விழுக்காடும் உலகம் முழுவதும் 25 விழுக்காடும் கத்தோலிக்கத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகிறது.

உதாரணமாக, கென்யா நாட்டில் தலத் திருச்சபை தன் பங்குதளங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் AIDS நோய் விழிப்புணர்வு குறித்த 600 திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் யேசுசபையினரின் அறிக்கை கூறுகிறது.

ஆப்பிரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மனைகள், 5000 சிறு மருந்தகங்கள் மூலம் பணியாற்றிவரும் திருச்சபை, AIDS நோயினால் அநாதைகளாகியுள்ள குழந்தைகளுக்கென 800 காப்பகங்களையும் நடத்தி வருகிறது.








All the contents on this site are copyrighted ©.