2009-11-28 14:50:29

மறைபோதகர் அருள்தந்தை மத்தேயோ ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டின் நினைவாக மக்காவோவில் கருத்தரங்கு


நவ.28,2009 மாபெரும் மறைபோதகராகிய இயேசு சபை அருள்தந்தை மத்தேயோ ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டின் நினைவாக மக்காவோவில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

ஆசிய மக்களின் வாழ்வில் இயேசு சபையினரின் கல்வி, குறிப்பாக சமய மற்றும் அறநெறி வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றிக் கண்டுணருவதற்கு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் சீனா, தாய்வான், சிங்கப்பூர், கொரியா, வியட்நாம் மற்றும் மேற்க்ததிய நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர்.

இத்தாலிய மறைபோதகராகிய இயேசு சபை அருள்தந்தை ரிச்சி, மக்காவோவில் சீன மொழியைக் கற்று சீனக் கலாச்சாரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதால் இக்கருத்தரங்கு மக்காவோவில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அருள்தந்தை ரிச்சியின் நினைவாக, 2010ம் ஆண்டில் இரண்டு கருத்தரங்குகளும் மேற்க்த்திய-சீன இசைக் கலப்பில் இரண்டு இசைக் கச்சேரிகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு சபை அருள்தந்தை மத்தேயோ ரிச்சி, 1610ம் ஆண்டு, அக்டோபர் 6ம் தேதி இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.