2009-11-28 14:53:40

சொமாலியாவில் இடம் பெறும் மனிதமற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட ஐ.நா.மனித உரிமைகள் ஆர்வலர் அழைப்பு


நவ.28,2009 ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் பொதுவில் வைத்து நடத்தப்படும் கல்லால் எறிந்து கொல்லுதல், கசையடிகள், கூட்டாக மரண தண்டனை நிறைவேற்றுதல் போன்ற மனிதமற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா.மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.
சொமாலியாவின் மத்திய மற்றும் தென் பகுதியில் இசுலாமிய ஆயுதம் தாங்கிய குழுக்களால் நடத்தப்படும் மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் இச்செயல்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மோசமடையச் செய்கின்றன என்று ஷாம்சுல் பாரி குறை கூறினார்.
இருபது வயதான பெண் ஒருவர் விபசாரக் குற்றம் சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி மொகதிஷில் 200 பேர் முன்னிலையில் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.