2009-11-28 14:49:08

கொலம்பியாவில் பிணையக் கைதிகளின் விடுதலைக்கு கத்தோலிக்கத் திருச்சபை உதவ அரசுத்தலைவர் விண்ணப்பம்


நவ.28,2009 கொலம்பிய நாட்டில் புரட்சியாளர்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை உதவுமாறு அந்நாட்டு அரசுத்தலைவர் விண்ணப்பித்துள்ளார்.

கொலம்பிய நாட்டு FARC புரட்சிக்குழுத் தலைவரை ஏற்கனவே சந்தித்துள்ள அந்நாட்டு கர்தினால் Darío Castrillón Hoyos விடம் இவ்வாறு கேட்டுள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் Álvaro Uribe Vélez.

இதற்கிடையே, FARC புரட்சிக்குழுத் தலைவர் Alfonso Cano வுக்கு வானொலி மூலம் அழைப்பு விடுத்த கர்தினால் திருமுழுக்கு பெற்றுள்ள உம்மை இயேசு கிறிஸ்துவின் பெயரால் விண்ணப்பிக்கிறேன் என்று, பணயக் கைதிகளின் விடுதலைக்காக ஏற்கனவே குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 ஆயிரம் முதல் 18 ஆயிரம் போராளிகளைக் கொண்ட FARC புரட்சிக்குழு, சுமார் 24 கொலம்பிய அதிகாரிகளையும் எண்ணற்ற அப்பாவி பொது மக்களையும் பணத்துக்காகக் கடத்தி வைத்துள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.