2009-11-26 15:37:50

புதிய மனிதத்துவத்திற்கு அழைப்பு விடுத்தார் கர்தினால் பெர்தோனே


நவ.26,2009 பிறரன்பு, உண்மை, நீதி இந்த மூன்றும் புதிய சமுதாய, பொருளாதார மனிதத்தை விளக்க உதவும் அடிப்படை கருத்துக்கள் என்று கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே கூறினார். இச்செவ்வாயன்று ரோமையிலுள்ள ஐரோப்பிய பல்கலைகழகத்தின் கல்வி ஆண்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கர்தினால் பெர்தோனே, திருத்தந்தை அண்மையில் வெளியிட்ட "Caritas in Veritate" என்ற மடல் புதிய மனிதத்துவத்தின் மையத்திற்கு மீண்டும் மனிதரை கொண்டு வந்துள்ளது எனக் குறிப்பிட்டார். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், புது வகைத் தொழில் நுட்ப வளர்ச்சி, உலகெங்கும் மக்கள் குடிபெயர்தல் ஆகியவை இப்போதைய மனிதத்தை எதிர்நோக்கும் கேள்விகள் எனவும், இந்தச் சூழலில் லாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்படும் வணிகத்துறை அந்த குறிக்கோளிலிருந்து மாறி, நன்னெறிகளை மையப் படுத்திய வணிகத்தை உருவாக்க வேண்டுமென கர்தினால் பெர்தோனே கூறினார்.







All the contents on this site are copyrighted ©.