2009-11-25 15:00:54

மரணதண்டனையை ஒழிக்க வேண்டுமெனும் கருத்தில் உர்பான் பல்கலைகழகத்தில் கருத்தரங்கு 


நவ.25,2009 உலகின் எல்லா அரசுகளும் மரணதண்டனையை ஒழிக்க வேண்டுமெனும் கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு கருத்தரங்கு ரோமையில் பாப்பிறை உர்பான் பல்கலைகழகத்தில் இன்று ஆரம்பமானது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் மரண தண்டனை பெற்று மூன்றாண்டுகள் சிறையில் இருந்து பின்னர் விடுதலை பெற்ற ஜோக்கின் ஹோசே மார்தீனேஸ் (Joaquin Jose Martinez) உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றும் இக்கருத்தரங்கின் மூலம் உலகின் பல அரசுகளும் மரணதண்டனையை ஒழிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனும் கருத்து வலியுறுத்தப்படும் என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. Omnes Gentes என்ற பெயர் கொண்ட உர்பானியா பல்கலைகழகத்தின் மாணவர் அமைப்பு, பல நாடுகளிலிருந்தும் வந்து இப்பல்கலை கழகத்தில் பயிலும் மாணவர்கள் இக்கருத்தரங்கின் மூலம் பயன் பெறுவர் என்று தெரிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு வெளியான Amnesty International அறிக்கையின்படி, சென்ற ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 25 நாடுகளில் 2,390 பேர் மரணதண்டனையில் இறந்தனர் என்றும், 52 நாடுகளில் குறைந்தது 8,864 பேர் வரையில் மரணதண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டுள்ளனர் என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.