2009-11-25 15:01:11

கத்தோலிக்க திருச்சபை இந்திய சமுதாயத்திற்கு செய்துவரும் சேவைகளை பாராட்டிய திரு.அத்வானி


நவ.25,2009 டில்லி மறைமாவட்டத்தின் ஜுபிலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற எதிக்கட்சித் தலைவர் அத்வானி, தனக்கு அந்த அழைப்பு வந்தது ஆச்சரியத்தை விளைத்தாலும், அந்த விழாவில் கலந்துகொள்வது பற்றி தனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார். கத்தோலிக்க திருச்சபை இந்திய சமுதாயத்திற்கு இதுவரை செய்துள்ள, இப்போதும் செய்துவரும் சேவைகளை பாராட்டிய திரு அத்வானி, பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்தவத்திற்கும் மற்ற சிறுபான்மையான மதங்களுக்கும் எதிரானதென சொல்லப்படுவது தவறான ஒரு கருத்து என்றும் குறிப்பிட்டார். தான் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தவரெனக் கூறிய திரு அத்வானி, இந்திய விடுதலை போராட்டத்திலும், அதற்குப்பின் இந்தியாவின் முன்னேற்றத்திலும் கிறிஸ்தவர்கள் காட்டிய ஈடுபாட்டை யாரும் மறுக்க முடியாதெனக் கூறினார். கடந்த ஒரு ஆண்டளவாய் டில்லி உயர்மறை மாவட்டம் கொண்டாடி வந்த ஜுபிலி ஆண்டின் நிறைவாக நடத்தப்பட்ட இந்த பொதுக் கூட்டத்தில் அத்வானி உட்பட பல அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும், ஏறத்தாழ 50,000க்கும் மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.