2009-11-24 15:43:47

திருத்தந்தைக்கும் குவைத் பிரதமருக்கும் இடையே திருப்பீடத்தில் இடம்பெற்ற சந்திப்பு


நவ.24,2009 இத்திங்களன்று திருத்தந்தைக்கும் குவைத் பிரதமருக்கும் இடையே திருப்பீடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி மற்றும் மதன்களிடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

திங்களன்று குவைத் பிரதமர் Sheik Nasser Al-Mohammad Al-Ahmad Al-Sabah திருத்தந்தை 16ஆம் பெனெடிக்டைச் சந்தித்து உரையாடியபின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தொனே மற்றும் வெளியுறவுத்துறையின் செயலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை துறை அலுவலகம், மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி மதங்களிடையேயான கலந்துரையாடலை ஊக்குவிப்பது குறித்தும், குவைத்தில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகம் அந்நாட்டிற்கு வழங்கி வரும் சிறப்பு பங்களிப்பு குறித்தும் அக்கிறிஸ்தவர்களுக்கான மேய்ப்புப் பணி நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. 








All the contents on this site are copyrighted ©.