2009-11-24 15:48:31

கந்தமால் வன்முறைகளில் சங்க் பரிவார் அமைப்பிற்கும் பங்குண்டு, ஒரிசா முதல்வர்


நவ.24,2009 ஒரிசாவின் கந்தமாலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு 38 பேரின் உயிரிழப்புகளுக்கும் 4640 வீடுகளின் சேதத்திற்கும் காரணமான வன்முறைகளில் சங்க் பரிவார் அமைப்பிற்கும் பங்குண்டு என ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

இத்திங்களன்று சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்வர் பட்நாயக், வி.ஹைச் பி தலைவர் லக்ஸ்மானந்தா சரஸ்வதி சுவாமிகளின் கொலையைத் தொடர்ந்து இடம் பெற்ற வன்முறைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.ஹைச்.பி மற்றும் பஜ்ரங்தள் அங்கத்தினர்கள் ஈடுபட்டதாக, அது குறித்த விசாரணை முடிவுகள் தெரிவிப்பதாகக் கூறினார்.

கந்தமால் வன்முறை தொடர்பாக 85 ஆர்.எஸ்.எஸ் அங்கத்தினர்கள், 321 வி.ஹைச்.பி அங்கத்தினர்கள், 118 பஜ்ரங்தள் அங்கத்தினர்கள், கைது செய்யப்பட்டதாகவும் அதில் 27 பேர் இன்னும் சிறையிலிருப்பதாகவும் மேலும் கூறினார் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்







All the contents on this site are copyrighted ©.