2009-11-24 15:50:24

உலகம் முழுவதும் 3 கோடியே 34 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், உலக நலவாழ்வு நிறுவனம்


நவ.24,2009 உலகம் முழுவதும் 3 கோடியே 34 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக நலவாழ்வு அமைப்பும் எய்ட்ஸ் நோய்க்கான ஐ.நா.அமைப்பும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

WHO மற்றும் UNAIDS ன் இவ்வறிக்கையின்படி 2007ம் ஆண்டு எய்ட்ஸ் நோய்க்கிருமி பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சமாக இருந்தது தற்போது மேலும் 4 இலட்சம் அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எய்ட்ஸ் நோய்க்கெதிரான மருத்துவ சிகிச்சையின் உதவியுடன் எய்ட்ஸ் நோய் இறப்புகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.